இலங்கையின் மோசமான நிலை என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. அத்தியாவசிய பொருட்களுக்கே அதிக விலை கொடுத்தாலும், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய மோசமான சூழல்.
அன்னிய செலவாணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகின்றது.
குறிப்பாக அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள எரிபொருளுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இலங்கை பொருளாதாரம் சீர்குலைந்து போச்சு.. ரணில் விக்கிரமசிங்க வேதனை
கல்வி நிலையங்கள் இயங்காது
அதோடு ஜூலை 10ம் தேதி வரையில் நகர்ப்புற கல்வி நிலையங்கள் இயங்காது என்றும், ஏனைய அனைத்து சேவைகளையும் முடக்குவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் போக்குவரத்து சேவையிலும் பல மாற்றங்கள் செய்துள்ளதாகவும், இதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கல்வி நிலையங்கள் இயங்காது
அதோடு ஜூலை 10ம் தேதி வரையில் நகர்புற கல்வி நிலையங்கள் இயங்காது என்றும், ஏனைய அனைத்து சேவைகளையும் முடக்குவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் போக்குவரத்து சேவையிலும் பல மாற்றங்கள் செய்துள்ளதாகவும், இதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அத்தியாவசிய தேவைக்கு மட்டும்
இலங்கையின் அத்தியாவசிய தேவை பட்டியலில் சுகாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு, துறைமுகங்கள், விமான நிலையம், உணவு சப்ளை மற்றும் விவசாயம் என பலவும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள எரிபொருள் இருப்பு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எரிபொருள்களை விற்பனை செய்ய அரசு டோக்கன் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவே முதல் முறை
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளும் வீட்டில் இருந்தே பணியை செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 22 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவு நாட்டில், இந்த அளவுக்கு எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது இதுவே முதல் முறை. எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் விலையும் 5 மடங்கு அதிகரித்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்?
கடைசியாக நேற்றும் கூட விலை உயர்ந்துள்ளது. இங்கு டீசல் விலை 460 இலங்கை ரூபாய்க்கும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 550 இலங்கை ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் இது வரையில் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதிக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏற்கனவே வாங்கிய எண்ணெய்க்கே பணம் செலுத்தாததால் இறக்குமதியாளர்கள், இனியும் கடனாக இறக்குமதி செய்வார்களா? என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
Sri lanka runs out of fuel, Service for emergency needs only until July 10th
Sri Lanka has announced that it will supply fuel only for essential needs until July 10.