சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேரை இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 6 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் உட்பட 34 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் வென்னப்புவ, நாத்தாண்டி, சிலாபம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் ஒரு வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.