அரிசியை நாம் வேக வைக்கும் முன்பாக பல முறை தண்ணீரில் கழுவ வேண்டாம். ஒரு முறை கழுவினால் போதும். அப்படி இரண்டாவது முறை கழுவினால் அந்த தண்ணீரை வீணாக்காமல் எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொள்வோம்.
இரண்டாம் முறை அரிசி கழுவிய தண்ணீரில் அதிக சத்துக்கள் உள்ளதால் வீட்டில் உள்ள செடிகளுக்கு நாம் பயன்படுத்தலாம். இதுபோல சாதம் வடித்த தண்ணீரில் அதிக ஊட்டசத்து உள்ளது. இதில் உப்பு போட்டு குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது. உடலில் நீரின் அளவு குறையும் பொழுது நீர்கடுப்பு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் அடிவயிற்றில் அதீத வலியும், சிறுநீர் கழிப்பதில் எரிச்சலும் ஏற்படும். இப்படியான பிரச்சனைகளும், வெள்ளை படுதல் பிரச்சனை, கண் எரிச்சலும் தீர தினமும் இந்த கஞ்சியை குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நாம் குளிக்கும்போது பயன்படுத்தும் சீகைக்காயில் தண்ணீருக்கு பதில் சாதம் வடித்த நீர் சேர்த்து பயன்படுத்தினால் முடி உதிர்வு, அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
மூட்டு வலி ஏற்பட்டால் சூடாக இருக்கும் வடித்த கஞ்சியை மூட்டு பகுதியில் ஊற்றி 10 நிமிடங்கள் அமுக்கி கொடுக்க வேண்டும். இதுபோலவே குதிகாலில் வலி ஏற்படும்போது, சூடான சாதம் வடித்த நீரில் கால் வைத்தால் வலி நீங்கும்.
முகத்தில் சாதம் வடித்த நீரை தடவி, 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள் மறையும். மேலும் துணி துவைக்கும்போது கடைசியாக இருக்கும் தண்ணீரில் சாதம் வடித்த நீர் ஊற்றி அலசினால், உடைகள் நிறம் மாறாமல் இருக்கும்.
பால் பாத்திரம், அசைவ உணவை சமைத்த பாத்திரத்தை கழுவ சாதம் வடித்த தண்ணீர் பயன்படுத்தலாம்.