மேற்குதிசை காற்று வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதேபோல ஆலந்தூர், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, ஆதம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்தது. அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.