செல்போன் பேசிக்கொண்டு விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர் கைது

தூத்துக்குடியில், பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , எல்கேஜி மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

செய்துங்கநல்லூரில் இருந்து நெல்லையில் உள்ள தனியார் பள்ளிக்கு ஆட்டோவில் மாணவர்களை ஏற்று கொண்டு சென்ற போது ஆட்டோ ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டு கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, தப்பிச் சென்ற ஓட்டுநர் ராஜை போலீசார் கைது செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.