முனிச்: ஜெர்மனியில் நடந்த ஜி7 மாநாட்டில் கலந்து பங்கேற்ற தலைவர்களுக்கு, இந்திய கலைநயத்தை உணர்த்தும் விதமாக தனித்தனியாக பிரதமர் மோடி பரிசளித்து அசத்தினார்.
ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோவுக்கு உ.பி., மாநிலம் நிசாமாபாத்தில் செய்யப்பட்ட கருப்பு மண்பாண்ட பண்டங்களை பரிசாக வழங்கினார்.
தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசாவிற்கு, சத்தீஸ்கரின், ராமாயணத்தை மைய பொருளாக கொண்ட டோக்ரா கலை பொருட்களை பரிசாக அளித்தார்.
அமெரிக்க அதிபர் பைடனுக்கு , வாரணாசியில் தயாரிக்கப்பட்ட குலாபி மீனாகரி புரூச் மற்றும் கப்லிங் செட்களை பரிசாக வழங்கினார்.
பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு, உ.பி., மாநிலம் புலாந்ஷரில் தயாரிக்கப்பட்ட பிளாட்டினமால் வர்ணம் தீட்டப்பட்ட தேநீர் கப்களை பரிசாக வழங்கினார்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரானுக்கு, ஒரு லிட்டர் அளவிலான பாட்டீல்கள் கொண்ட ஜர்தோசி பெட்டியை பரிசளித்தார். இது லக்னோவில் தயாரிக்கப்பட்டது ஆகும்.
இத்தாலி பிரதமர் மாரியே ரகிக்கு, ஆக்ராவில் தயாரிக்கப்பட்ட மார்பிள் இன்லே டேபிள் டாப்-பை பரிசாக மோடி கொடுத்தார்.
ஜெர்மன் சான்சிலர் ஓலப் ஸ்கால்ஜ்க்கு, உ.பி., மாநிலம் மொராதாபாத்தில் தயாரிக்கப்பட்ட கலைநயத்துடன் கூடிய வெண்கல குவளையை மோடி பரிசளித்தார்.
செனகல் அதிபர் மக்கி சல்லுக்கு உ.பி., மாநிலம் சித்தப்பூரில் தயாரிக்கப்பட்ட கோரைப்புல்லால் செய்யப்பட்ட கூடைகள் மற்றும் பருத்தி துணிகளை பரிசாக வழங்கினார்.
இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோவுக்கு அரக்கில் தயாரிக்கப்பட்ட ராமர் தர்பாரை மோடி பரிசளித்தார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, கைகளால் பின்னப்பட்ட பட்டு கம்பளத்தை பரிசாக வழங்கினார்.