ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவரும், நாட்டின் முக்கியப் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான பலோன்ஜி மிஸ்திரி இன்று மறைந்தார்.
ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் இன்ஜினியரிங் மற்றும் கட்டுமானம், இன்பராஸ்டக்சர், ரியல் எஸ்டேட், தண்ணீர், எனர்ஜி மற்றும் நிதியியல் சேவை எனப் பல துறையில் இயங்கி வருகிறது. ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு முதலும் முக்கியக் காரணம் பலோன்ஜி மிஸ்திரி தான்.
பலோன்ஜி மிஸ்திரி தனது மும்பை வீட்டில் 93வது வயதில் மறைந்தார்.
ரத்தன் டாடா-வுக்கு 84-வது பிறந்த நாள்.. சாமனிய மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் தொழிலதிபர்.. ஏன்..!
ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்
1865ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் மும்பையில் இருக்கும் ரிசர்வ் வங்கி கட்டிடம் உட்படப் பல முக்கியமான ரியல் எஸ்டேட் திட்டங்களைச் செய்து பல கோடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நிறுவனம் என்றால் மிகையில்லை.
பலோன்ஜி மிஸ்திரி
ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தில் பலோன்ஜி மிஸ்திரி நேரடி நிர்வாகப் பணிகளில் இருந்து விலகி நீண்ட காலம் ஆன நிலையில் தற்போது, இக்குழுமத்தை பலோன்ஜி மிஸ்திரி-யின் வாரிசுகளான சைரஸ் மிஸ்திரி மற்றும் பலர் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
டாடா குழுமம்
அனைத்தையும் தாண்டி ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தை நிர்வாகம் செய்யும் பலோன்ஜி குடும்பம் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதன் மூலம் டாடா சன்ஸ் நிர்வாகத்தில் அதிகப்படியான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
பலோன்ஜி மிஸ்திரி பிரபலம்
டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா குரூப்-ன் டாடா டிரஸ்ட் 66 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், அடுத்தபடியாக ஷபூர்ஜி பலோன்ஜி குடும்பம் தான் அதிகப்படியான பங்குகளை வைத்துள்ளது. இதனாலேயே பலோன்ஜி மிஸ்திரி இந்திய வர்த்தகச் சந்தையில் மிகவும் பிரபலமானவராகத் திகழ்கிறார்.
சைரஸ் மிஸ்திரி
டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் வைத்திருக்கும் பங்குகளின் ஆதிக்கத்தின் காரணமாகப் பலோன்ஜி மிஸ்திரி-யின் மகன் சைரஸ் மிஸ்திரி நவம்பர் 2011 முதல் அக்டோபர் 2016 வரையில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக இருந்தார். சைரஸ் மிஸ்திரியின் பதவி தான் வழக்கு மூலம் பரிக்கப்பட்டு ரத்தன் டாடா கைப்பற்றி, அதன் பின் என்.சந்திரசேகரனுக்குக் கொடுக்கப்பட்டது.
பார்சி குடும்பம்
பலோன்ஜி மிஸ்திரி குஜராத்-ஐ சேர்ந்த பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர், இவருடைய தந்தை 1930களில் டாடா குழுமத்தில் வாங்கிய பங்குகள் தான் தற்போது 18.4 சதவீத டாடா சன்ஸ் பங்குகளாக உயர்ந்து இருக்கிறது.
முக்கிய நிறுவனங்கள்
ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் ரியல் எஸ்டேட், கட்டுமானத்தை முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இருந்தாலும் போர்ப்ஸ் டெக்ஸ்டைல்ஸ், Eureka Forbes போன்ற நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது பலோன்ஜி மிஸ்திரி தலைமையிலான ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்.
Pallonji Mistry dies at 93; Business tycoon pallonji family who owns 18.4 percent stake in Tata Sons
Pallonji Mistry dies at 93; Business tycoon pallonji family who owns 18.4 percent stake in Tata Sons டாடா குழுமத்தின் பெரும் பங்குதாரர் பலோன்ஜி மிஸ்திரி 93 வயதில் மறைந்தார்..!