தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு எடுத்துச்செல்ல இ-இன்வாய்ஸ் கட்டாயம் என கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மற்றும் நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு கொண்டு செல்ல எந்தவித தடையும் இல்லாத நிலையில் இனிமேல் இ-இன்வாய்ஸ் கட்டாயமாக்கப்படும் என்ற தகவல் தங்க நகை வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 சதவீதம் ஜிஎஸ்டி வரி.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!
ஜிஎஸ்டி கூட்டம்
இன்று மற்றும் நாளை சண்டிகரில் 47வது ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட உள்ள நிலையில் தங்கத்திற்கான இவே பில் அதாவது இ-இன்வாய்ஸ் கட்டாயமாக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.2 லட்சம் மதிப்பு தங்கம்
ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு எடுத்துச் செல்லும்போது இவே பில் கட்டாயமாக்கப்பட வேண்டும் என ஏற்கனவே ஒரு சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இ-இன்வாய்ஸ்
அதேபோல் ஒரு வருடத்தில் 20 கோடிக்கும் அதிகமாக கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் நகை வர்த்தகர்கள் மாநிலங்களுக்கு இடையே தங்கம் விலை உயர்ந்த கற்கள் பரிமாறிக் கொள்ளும் போது இ-இன்வாய்ஸ் கட்டாயமாக்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்.ஐ.சியுடன் ஆலோசனை
இதுகுறித்து ஜிஎஸ்டி நெட்வொர்க், என்.ஐ.சியுடன் கலந்து ஆலோசித்து, அதன்பின் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யும் என்றும் இன்று நடைபெறும் ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டத்தில் இது குறித்த முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
மாநில அரசு
ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களை கொண்டு செல்லும் இ-இன்வாய்ஸ் குறித்த இறுதி முடிவை மாநில அரசு எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
கேரள நிதியமைச்சர்
கேரள நிதி அமைச்சர் கே என் பாலகோபால் தலைமையிலான அமைச்சர்கள் குழு தங்கம் மற்றும் விலை மதிப்பற்ற கற்களை ஆண்டுக்கு 20 கோடிக்கு மேல் மொத்த விற்றுமுதல் செய்யும் வர்த்தகர்கள் அனைவரும் வரி செலுத்துவோரின் பி2பி பரிவர்த்தனைகளுக்கு கட்டாயம் மின் விலைப்பட்டியல் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
Mandatory e-way bills for gold set to be on GST Council table
Mandatory e-way bills for gold set to be on GST Council table | தங்கத்தை இனி பக்கத்து மாநிலத்திற்கு கூட எடுத்து கொண்டு செல்ல முடியாதா? இ-இன்வாய்ஸ் கட்டாயமா?