தனது தந்தை குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கோரிக்கை வைத்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கம்ரான் அக்மலின் சகோதரரும், கிரிக்கெட் வீரருமான உமர் அக்மல் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
அதில் தனது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் உள்ளது.
அத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அபுவிற்காக (தந்தைக்காக) தயவுசெய்து வேண்டிக்கொள்ளுங்கள், நாங்கள் மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவரது தந்தைக்கு என்ன பிரச்சனை என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தேசிய அணியில் விளையாட உமர் அக்மலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
REQUEST
Plz pray for my Abu he is hospitalised
We are going through a very tough time🤲 pic.twitter.com/c2CbTz4Eky— Umar Akmal (@Umar96Akmal) June 27, 2022
அவர் கவுண்டி கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
மேலும் தற்போதைய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இவரது உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Source: Twitter