நவி மும்பை தமிழ்ச்சங்க விரிவாக்கத்துக்கு தமிழகஅரசு ரூ.25லட்சம் நிதியுதவி!

சென்னை:  நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்க பணிகளுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியது. இந்த நிதியை சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று  நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 இலட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. வ.ரெ.போ. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம்  முதலமைச்சர் வழங்கினார்.

ஏற்கனவே  திமுக அரசு  பொறுப்பேற்றதும், முடிவுறாமல் இருந்த நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூபாய் 25 இலட்சம் முதலமைச்சரால் 10.12.2021 அன்று வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கட்டடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று. கட்டடப் பணிகளுக்காக மேலும் 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை இன்று முதலமைச்சர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது. அவ்வகையில், நவிமும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பாக மொத்தம் ரூபாய் 1 கோடியே 25 இலட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.