ஆனந்த் மஹிந்த்ரா அவர்கள் ஒரு தொழிலதிபர் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது அவரது டுவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்பவர்களுக்கு தெரிந்து இருக்கும்.
சமூகத்தில் எந்த ஒரு நல்ல, வித்தியாசமான விஷயங்கள் நடந்தாலும் அதனை பாராட்டுவதோடு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்பது அவரது பழக்கங்களில் ஒன்றாக உள்ளது.
அதே போல் சமூக வலைதள பயனாளர்கள் தங்களது சந்தேகத்தை கேட்டால் அதற்கு அழகான பதிலை அளிக்கும் வழக்கம் உடையவராக உள்ளார்.
மும்பை பெண்ணின் வர்த்தகத்தை புகழ்ந்து தள்ளும் ஆனந்த் மஹிந்திரா..!
நீங்க என்ன படிச்சிருக்கீங்க?
இந்த வகையில் ஆனந்த் மஹிந்திரா அவர்களிடம் ‘நீங்க என்ன படிச்சிருக்கீங்க ? என்று டுவிட்டர் பயனாளி ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய அழகான பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அழகான பதில்
டுவிட்டர் பயனாளி வைபவ் என்பவர் ‘சார் நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டார். இதற்கு ஆனந்த் மஹிந்திரா, ‘நான் என்னுடைய படிப்பாக நினைப்பது என் அனுபவத்தை தான்’ என்று அழகாக பதில் அளித்துள்ளார்.
குவியும் வாழ்த்துக்கள்
இந்த பதில் அவர் நேரடியாக என்ன படித்து இருக்கிறார் என்பதை தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த அழகான பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிலுக்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சுவாரஸ்யமான கமெண்ட்ஸ்
ஒருவர் என்ன படிப்பு படித்து இருக்கிறார் என்பது முக்கியம் அல்ல என்றும் அவர் தற்போது என்ன நிலையில் உள்ளார் என்பது தான் முக்கியம் என்றும் பலர் அவரது பதிலுக்கு கமெண்ட்டில் தெரிவித்துள்ளனர். படித்தவர்கள் படிக்காதவர்கள் என யாராக இருந்தாலும் தங்கள் அனுபவத்தை வைத்து முன்னேறியவர்களே நாட்டில் அதிகம் என்றும் ஒருசிலர் சுவாரஸ்யமாக கமெண்ட் அளித்து வருகின்றனர்.
பெருகும் ஆதரவு
அனுபவத்தை விட வேறு எந்த பெரிய படிப்பும் பெரிதல்ல என்ற அவருடைய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. படிப்பு என்பது நமது அறிவை பெருக்கிக் கொள்ள தானே தவிர அனுபவம் மட்டுமே வாழ்க்கையை வெற்றி அடைய செய்யும் என்றும் பலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
அனுபவமே சிறந்த படிப்பு
வருண் ஸ்ரீதர் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திராவின் பதில் குறித்து கூறியபோது, ‘நான் மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இருப்பினும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எந்த வேலைக்கு சென்றாலும் என்ன அனுபவம் என்று கேட்கிறார்கள் என்று அவர் பதிவு செய்துள்ளார். எனவே அனுபவமே சிறந்த படிப்பு என்ற ஆனந்த் மகேந்திராவின் அழகான கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Anand Mahindra responds to Twitter user asking for his qualification, wins hearts
Anand Mahindra responds to Twitter user asking for his qualification, wins hearts | நீங்க என்ன படிச்சிருக்கீங்க … டுவிட்டர் பயனாளி கேள்விக்கு ஆனந்த் மஹிந்திராவின் அழகான பதில்!