வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அபுதாபி: நுபுர் சர்மா விவகாரத்திற்குப் பிறகு, ஒரு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமீரேட்ஸ்(யுஏஇ) வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நயான் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார்.
ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார். வழியில், ஐக்கிய அரபு எமீரேட்ஸ் முன்னாள் அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்க அபுதாபி சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் மோடியை, யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் நேரில் வந்து கட்டியணைத்து வரவேற்று அழைத்து சென்றார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், இது சிறப்பான வரவேற்பு. அதிபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் விமான நிலையத்திற்கு வந்து அங்கேயே ஆலோசனை நடத்தினர் என்றார்.
இந்த சந்திப்பின் போது, அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு மோடி, தனது இரங்கலை தெரிவித்து கொண்டார். பின்னர், இரு தரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
Advertisement