விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா அரசு உக்ரைன் மீது போர் தொடுத்த பின்பு உலக நாடுகளிடம் இருந்து அதிகளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டாலும், ரஷ்யாவின் ஆதிக்கத்தை உலக நாடுகளுக்குக் காட்டியுள்ளது என்றால் மிகையில்லை.
ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு இல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் முடங்கியுள்ளது, அதுமட்டுமா ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் உணவு பொருட்கள் இல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் அதிகப்படியான உணவு பணவீக்கத்தை எதிர்கொண்டு உள்ளது.
ஆனால் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு என்பதைத் தாண்டி தனக்கு வருமானம் ஈட்டும் அனைத்து துறையின் குடுமியும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் உள்ளது என்பது தான் தற்போது இருக்கும் முக்கியமான பிரச்சனை.
ரிலையன்ஸ் ஜியோ சேர்மன்: ஆகாஷ் அம்பானி சாதித்துள்ளது என்ன..? உண்மையில் தகுதியானவரா..?
ரஷ்யா
ரஷ்யாவில் இருக்கும் 90 சதவீத தொழிற்சாலைகள், விவசாயத் துறை வர்த்தகம், எண்ணெய் வர்த்தகம் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனத்தின் மென்பொருளில் இயங்கி வருகிறது. ரஷ்யா எப்படித் தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வைத்து உலக நாடுகளை மிரட்டுகிறதோ…
பொருளாதார அடிப்படை
அதேவேளையில் ரஷ்யா பொருளாதாரத்திற்கு அடிப்படையே வெளிநாட்டு நிறுவனங்கள் கையில் உள்ளது. மேலும் ரஷ்யாவில் இருந்து அடுத்தடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி வரும் வேளையில் ரஷ்யாவுக்கு இது பெரும் ஆபத்தாக விளங்கும். விளாடிமிர் புதின்-க்கு இப்போது இதுதான் பெரும் தலைவலியாக உள்ளது.
சிமென்ஸ் AG முதல் SMS குரூப்
உலக நாடுகளின் தடையின் காரணமாகத் தற்போது ரஷ்யாவில் இருந்து சிமென்ஸ் AG முதல் SMS குரூப் GMBH வரை பல தொழிற்துறை உற்பத்தியாளர்கள் வெளியேறி வரும் நிலையில், தத்தம் நிறுவனங்களின் மென்பொருள் சேவைகளும் தடை பெறுகிறது என்பது பெரும் அச்சத்தை ரஷ்யா பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
உற்பத்தித் துறைக்கான மென்பொருள்
ரஷ்யாவுக்குத் தற்போது CAD மற்றும் உற்பத்தித் துறைக்கான மென்பொருள் வாங்குவதில் தன் பெரும் பிரச்சனை, ஒருபக்கம் வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் வர்த்தக தடை மறுப்பும் இப்பிரிவில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் இல்லை என ரஷ்ய வர்த்தகச் சந்தை ஆலோசகர் எலெனா செமனோவ்ஸ்கயா தெரிவித்துள்ளார்.
சீனா, இந்தியா
ஸ்டீல் உற்பத்தியில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தி வரை.. விவசாய துறை சேவைகள் முதல் மருத்துவச் சேவை வரை எனப் பல துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் சேவை தான் ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரஷ்யாவுக்குச் சீனா, இந்தியா நிறுவனங்கள் மட்டுமே பெரிய அளவில் உதவும்.
ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி கையில் ரிலையன்ஸ்.. அப்போ முகேஷ் அம்பானி..?
Russia’s oil to steel Industry Faces software Crisis Amid major IT companies left country
Russia’s oil to steel Industry Faces software Crisis Amid major IT companies left country அடேய் பாடி சோடா.. மண்ட மேல இருந்த கொண்டைய மறந்த ரஷ்யா..!