பொதுவாக தேனில் அளவுக்கு அதிகமான மருத்துவ குணங்கள் மட்டுமல்ல, அதீத அழகியல் நன்மைகளும் உள்ளன. தேன் ஒரு இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மூலப்பொருள் ஆகும்.
70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. அதனால் தான் பல ஆண்டுகளாக நமது அழகு குறிப்புகளில் தேனுக்கு என்று தனி இடம் உள்ளது.
இது முகப்பரு, கரும்புள்ளி, வெண்புள்ளி போன்ற பல பிரச்சினைகளை போக்க பெரிதும் உதவுகின்றது.
அந்தவகையில தேனை எப்படி எல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
- தக்காளி சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, தினமும் 10 நிமிடங்களுக்கு சருமத்தில் தடவினால், முகத்தில் திறந்திருக்கும் துளைகள் அடைக்கப்படும்.
- ஒரு துளி தேனுடன் மசிக்கப்பட்ட கிவி பழம் மற்றும் ஒரு டீஸ்பூன் ஓட்ஸைக் கலந்து கொள்ளவும். இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள சோர்வு மற்றும் கருமை, மந்தம் போன்றவற்றை நீக்க உதவும்.
- -ஒரு கப் பப்பாளியை மசித்து, கூழாக ஆக்கி, அத்துடன் 1-2 டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து கலந்துகொள்ளவும். இந்த மென்மையான பேஸ்ட்டை உங்கள் முகத்தில் அப்ளே செய்து, சுமார் 15-20 நிமிடங்கள் விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேக் உங்களுக்கு உடனடி பொலிவை தரும்.
- பாதாம், தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைப் பயன்படுத்தியும் பேக் செய்து பூசலாம். 1 டேபிள் ஸ்பூன் தேனுடன், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். அதை உங்கள் முகத்தில் தடவி, உலர்ந்ததும் மெதுவாக துடைத்து எடுக்கவும்.
- பச்சையான தேனை உங்கள் முகத்தில் தடவவும்.பின்னர் சில நிமிடங்கள் கழித்து மென்மையான துணியால் முகத்தை மெதுவாக துடைத்து எடுக்கவும். இது சரும பொலிவை அதிகரிக்க உதவுகிறது.
- எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, சருமத்தின் மீது ஸ்கிரப் செய்யவும். பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது உங்கள் துளைகளை ஆழமாக சுத்தம் செய்து புதிய தோற்றத்தை கொடுக்கும்.
- வறண்ட சருமம் உள்ளவர்கள் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பச்சை பாலுடன் கலந்து கொள்ளுங்கள். அந்த கலவையில் பருத்தி பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும். அதனை நன்றாக உலர விட்டு, பின்னர் மென்மையான துணியால் துடைத்து சுத்தப்படுத்துக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்தால் நல்ல ரிசல்ட் கிடைப்பதை கண்கூடாக உணரலாம்.
- 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ½ டீஸ்பூன் பெருஞ்சீரகம் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் பச்சை தேன் கலந்து கொள்ளவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து, அதனை முகத்தில் அப்ளே செய்து 20 நிமிடங்கள் காய விடவும். அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் ஏற்படும் கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை சரி செய்ய உதவுகின்றன.