தூத்துக்குடி அருகே, திருமணம் செய்த இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்றதைக் கூறி கேலி செய்த நண்பனை, மதுபோதையில் அடித்துக் கொலை செய்த டிரைவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் மானகசேரியைச் சேர்ந்த மகேஸ்வரனும், செல்வகுமாரும் மீன் லாரி டிரைவர்களாக பணியாற்றி வந்தனர்.
கடந்த 19ம் தேதி விசாகப்பட்டினத்திற்கு இருவரும் லாரியில் மீன் லோடு ஏற்றிச் சென்ற போது மதுபோதையில் இருந்த மகேஸ்வரன், மனைவிகளை பிரிந்து வாழும் செல்வகுமாரைப் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
கடந்த 23ந்தேதி மகேஸ்வரனின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்வகுமாரையும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.