மயிலாடுதுறையில் பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் சோகத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணியத் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ரித்தீஷ் கண்ணா. இவர் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் நான்கு பாடப்பிரிவுகளில் ரித்திஷ் கண்ணா தேர்ச்சி பெறவில்லை என்பதால் மன வேதனையில் இருந்துள்ளார்.
இதையடுத்து மன உளைச்சலுக்கு ஆளான ரித்தீஷ் கண்ணா நேற்று இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய பின்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.