மீண்டு வருகிறதா கிரிப்டோ சந்தை: ஏற்றத்தை நோக்கி சில பிட்காயின்கள்!

கடந்த சில வாரங்களாக பிட்காயின் சந்தை உச்சக்கட்ட வீழ்ச்சியில் இருந்த நிலையில் தற்போது மீண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் ஒரு சில பிட்காயின்கள் குறிப்பாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களின் விருப்பத்துக்குரிய பிட்காயின்கள் கடந்த வாரத்தில் நல்ல ஏற்றத்தை பெற்றுள்ளன.

எனவே பிட்காயின்கள் சந்தை மீண்டு வருவதாக கூறப்பட்டாலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இருந்த நிலை இன்னும் வரவ்ல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிட்காயின் நிலைமை என்ன தெரியுமா.. கதறும் முதலீட்டாளர்கள்..!

பிட்காயின்கள்

பிட்காயின்கள்

தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களின் விருப்பத்துக்குரிய பிட்காயின் Shiba Inu மட்டும் சமீபத்தில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 42 சதவீதம் உயர்ந்துள்ளதால் இதில் முதலீடு செய்தவர்கள் நம்பிக்கை பெற்றுள்ளனர்.

உலகின் இரண்டாவது பெரிய பிட்காயின் Shiba Inu உயர்ந்திருப்பதால் தற்போது பிட்காயின் சந்தை மீள்வதற்கான அறிகுறி இருப்பதாக யுனோமேட்ரா நிறுவனர் அர்ஜித் முகர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் $622.59 மில்லியன் மதிப்புள்ள Shiba Inu வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதால் இதேபோன்று மற்ற பிட்காயின்களும் மீண்டு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

மீண்டு வரும் பிட்காயின்

மீண்டு வரும் பிட்காயின்

இருப்பினும் மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது 50% பிட்காயின்களின் மதிப்பு குறைந்துள்ளது என்றும், சந்தையின் போக்கு காரணமாக குறைந்திருந்தாலும் இது நிலையானது இல்லை என்றும் விரைவில் மீண்டு வரும் என்றும் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Dogecoin பிட்காயின்
 

Dogecoin பிட்காயின்

அதேபோல் இன்னொரு பிட்காயினான Dogecoin தற்போது உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் இந்த பிட்காயின் 13 சதவீதம் உயர்ந்து உள்ளது என்றும் அதன் சந்தை மதிப்பு 10.3 பில்லியன் டாலரை காட்டிலும் அதிகமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த பிட்காயின் 1.18 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஒருசில பிட்காயின்கள் விலை உயர்ந்து தற்போது எழுச்சி அடைந்து இருந்தாலும், பிட்காயின் சந்தையின் மோசமான நிலை முடிந்துவிட்டது என்று முடிவு செய்யக்கூடாது என்றும் இன்னும் சில மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் அவர்கள் தனது டுவிட்டரில் பிட்காயின்களுக்கு ஆதரவு அளிப்பது சில நேரம் நேர்மறையையும் சில நேரம் எதிர்வினையையும் அற்றும் என பிட்காயின் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் பிட் காயின் சந்தை நேற்றைய திங்கட்கிழமை வர்த்தகத்தில் $1 டிரில்லியன் சந்தை மூலதனத்தை பெற்றுள்ளதால் கிரிப்டோ சந்தை மீண்டு வருவதற்கான அறிகுறி பிரகாசமாக இருப்பதாகத்தான் தெரிகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

The crypto market to revisit the $1 trillion market capitalization

The crypto market to revisit the $1 trillion market capitalization | மீண்டு வருகிறதா கிரிப்டோ சந்தை: ஏற்றத்தை நோக்கி சில பிட்காயின்கள்!

Story first published: Tuesday, June 28, 2022, 12:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.