மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நான்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. குர்லா பகுதியில் உள்ள அந்த கட்டிடம் நேற்றிரவு இடிந்து விழுந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக இடிபாடுகளில் இருந்து 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் 20 முதல் 25 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே, கட்டிடங்களை காலி செய்யுமாறு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியிருந்ததாக தெரிவித்தார்.