மும்பை : மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குர்லா பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனே மீட்புப் பணியை தொடங்கினர்.இதுவரை 8 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஒருவர் இந்த விபத்தில் பலியாகி உள்ளார்.11 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 20 முதல் 25 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2 தீயணைப்பு வாகனங்கள், 2 மீட்பு வாகனங்களில் இருந்து வந்த வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் சில வீடுகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு குடியிருப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு 6 ஆண்டுகளுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்ற அந்த மாநில முதல்வர் ஆதித்ய தாக்கரே ஆய்வு நடத்தினார்.