இந்திய எண்ணெய் கழக நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
மும்பையிலிருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான துரப்பண மேடைக்கு அருகே விபத்து நேரிட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் 2 விமானிகள் உள்பட 7 பேர் இருந்த நிலையில் கடலோர பாதுகாப்புப் படை உதவியுடன் அனைவரும் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 4 பேர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.