டென்னிஸ் போட்டியின் போது, மைதானத்தில் மயங்கி விழுந்த பந்து எடுத்துப் போடும் சிறுவனுக்கு பிரிட்டன் வீராங்கனை உதவிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடுமையான வெயில் நிலவிய நிலையில், பந்து எடுத்து போடும் சிறுவன் ஒருவர் மயங்கினார்.
அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிரிட்டன் வீராங்கனை ஜோடி பரேஜ் விரைந்து செயல்பட்டு, குளிர்பானம் மற்றும் சாக்லேட் வழங்கி சிறுவனை ஆசுவாசப்படுத்தினார்.