ரஷ்யா – உக்ரைன் போர் முடிந்தபாடில்லை, சீனாவில் கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகள் தொடரும் வேளையில், அனைத்து வல்லரசு நாடுகளிலும் பணவீக்கம் தலைவிரித்து ஆடுகிறது.
இந்த நிலையில் WTI கச்சா எண்ணெய் விலை 1.34 சதவீதம் அதிகரித்து 111 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 116.8 டாலர் என 1.5 – 1.7 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்று சரிவை எதிர்கொண்டு உள்ளது.
மீண்டும் வரலாற்று சரிவில் முடிந்த ரூபாய் மதிப்பு..!
கச்சா எண்ணெய்
இந்திய சந்தையும், இந்திய ரூபாயும், இந்திய பொருளாதாரமும் சர்வதேச சந்தை சூழ்நிலை காரணமாக அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், கடந்த 3 நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பங்குச்சந்தையும், ரூபாய் மதிப்பும் தொடர் சரிவில் இருந்து மீண்டு உயர்வுடன் இருந்தது.
மும்பை பங்குச்சந்தை
இதற்கிடையில் இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1 டாலருக்கும் மேல் அதிகரித்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் அதிகப்படியான சரிவை சந்தித்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள்
இதன் வாயிலாக அன்னிய முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வை அடிப்படையாக வைத்து அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தங்களது முதலீடுகளை வெளியேற்றத் துவங்கினர்.
இந்திய ரூபாயின் மதிப்பு
இதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றும் எதிர்பார்க்காத வகையில் 78.59 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 78.34 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ
இந்தச் சரிவு தொடர்ந்தால் கட்டாயம் ஆர்பிஐ டாலர் இருப்பில் இருந்து அதிகப்படியான டாலரை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலருக்கான டிமாண்ட் குறைந்து ரூபாய் மதிப்புக் கட்டுப்படுத்த முடியும்.
பங்குச்சந்தை சரிவு
மும்பை பங்குச்சந்தை 3 நாள் தொடர்ந்து உயர்வுடன் இருந்த காரணத்தால், மகிழ்ச்சியுடன் இன்று வர்த்தகம் செய்ய வந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து சரிவுடன் இருக்கும் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரையில் சரிந்து அதிர்ச்சி கொடுத்தது.
இந்திய சந்தை
அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட 1 டாலர் உயர்வும் ஆசிய பங்குச்சந்தையைச் சரிவுக்குத் தள்ளியது. இதன் வாயிலாக இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி ரூபாய் மதிப்பை புதிய வரலாற்றுச் சரிவுக்குத் தள்ளி உள்ளது.
Rupee hits record low on higher global crude prices
Rupee hits record low on higher global crude prices வரலாற்றுச் சரிவில் ரூபாயின் மதிப்பு.. அன்னிய முதலீடு வெளியேற்றம்.. என்ன காரணம்..?!