இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, எப்போதும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். அவ்வப்போது சுவரஸ்யமான பதிவுகள், பலரையும் சிந்திக்க வைக்கும் பதிவுகள், திறமைகளை சுட்டிக் காட்டும் விதமான பல பதிவுகளை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளவர்.
இதனாலேயே இவரின் ட்விட்டர் பக்கத்தினை பல கோடி பேர் தொடர்ந்து வருகின்றனர்.
நீங்க என்ன படிச்சிருக்கீங்க … டிவிட்டர்வாசி கேட்ட கேள்விக்கு ஆனந்த் மஹிந்திராவின் அழகான பதில்!
சிறுமியின் ஆர்வம்
ட்விட்டர் பயனர் அபிஷேஜ் துபே என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுமி ஒருவர் வனப்பகுதியில் தனியாக அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் புகைப்படைத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நான் ஹிமாச்சலின் ஸ்டெளன் பகுதியில் பயணம் செய்தபோது இந்த சிறுமி தனியாக அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அவர் புத்தக்கங்களின் மீது கொண்டு இருந்த ஈடுபாடு கண்டு பெரிதும் ஈர்ப்படைந்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவள் என் உத்வேகம்
இதற்கிடையில் ஆனந்த் மஹிந்திராவிடம் அபிஷேக் சார் உங்களுடைய குவாலிபிகேஷன் என்ன என்று கேட்க, அதற்கு அனைவரையும் கவரும் விதமாக என்னுடைய அனுபவமே என்னுடைய படிப்பு என கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஆனந்த் மஹிந்திராவிடம் அபிஷேக் சார் உங்களுடைய குவாலிபிகேஷன் என்ன கேட்க, அதற்கு அனைவரையும் கவரும் விதமாக என்னுடைய அனுபவமே என்னுடைய படிப்பு என கூறியுள்ளார்.
நரசிம்மராவுக்கு வணக்கம்
இதே மற்றொரு ட்வீட்டில் 1991ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தின் போக்கையே மாற்றியமைக்கும், துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கோள்ள துணிந்த மனிதருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கம் செலுத்துகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதோடு #PVNarasimharao என்ற ஹேஷ்டேக்கினையும் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு மைல்கல்
நேற்றைய அனைத்து கவனமும் #ScorpioN -ல் மட்டுமே இருந்தது. ஆனால் ஒரு பயணத்தில் மற்றொரு மைல்கல்லினை நாங்கள் அமைதியாக கொண்டாடியுள்ளோம். இது நீண்ட காலத்திற்கு இந்தியாவில் மாற்றத்தினை கொண்டு வரும். இது போக்குவரத்தில் மாற்றத்தினை கொண்டு வரும்.. மின்சார மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை குறித்தான பதிவினை டேக் செய்தும் பதிவிட்டுள்ளார்.
anand mahindra tweet on pv narasimha rao
Anand Mahindra took to Twitter to pay tribute to the brave man who changed the course of the Indian economy in 1991 and made bold reforms on his birthday.