2022ல் முதலீடு செய்ய சிறந்த எல்.ஐ.சியின் 7 பாலிசிகள்

லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பாலிசிகள் குறைந்த ரிஸ்க் உள்ள மக்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு கருவியாகவும், குடும்ப பாதுகாப்பு அம்சமாகவும் விளங்கி வருகிறது.

தற்போது பங்குச்சந்தை மிக மோசமாக இருக்கும் சூழ்நிலையில் உறுதி அளிக்கப்பட்ட வருமானம் மற்றும் நீண்டகால முதலீட்டை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் அதற்கு எல்ஐசி ஆயுள் பாலிசி ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.

எல்ஐசி பாலிசிகள் உங்களுக்கு உறுதியான வருவாய் தருவது மட்டுமின்றி சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தில் இருந்தும் உங்களை பாதுகாக்கின்றன. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த ஏழு சிறந்த பாலிசி குறித்து தற்போது பார்ப்போம்.

ஒரே நம்பிக்கையும் போச்சு: வட்டியை உயர்த்திய எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் !

1.ஜீவன் லாப் பாலிசி

1.ஜீவன் லாப் பாலிசி

எல்ஐசியின் ஜீவன் லாப் என்பது வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் லாபத்துடன் கூடிய எண்டோவ்மென்ட் திட்டமாகும். இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின்படி முதிர்ச்சிக்கு முன் எந்த நேரத்திலும் பாலிசிதாரருக்கு துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கிறது. மேலும் பாலிசிதாரர் நலமாக இருந்தால் முதிர்வு நேரத்தில் மொத்தத் தொகையை வழங்குகிறது.

பிளான் எண்: 936

குறைந்தபட்ச வயது: 8

அதிகபட்ச வயது: 50-59

2 லட்சம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

முதிர்வு 75வது வயதில்

 

2. புதிய எண்டோவ்மெண்ட் திட்டம்

2. புதிய எண்டோவ்மெண்ட் திட்டம்

எல்ஐசியின் புதிய எண்டோவ்மென்ட் திட்டம் என்பது ஒரு சிறந்த திட்டமாகும், இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அம்சங்களின் கவர்ச்சிகரமான கலவையாக உள்ளது. இந்த திட்டத்தின்படி முதிர்வுக்கு முன் எந்த நேரத்திலும் பாலிசிதாரர் இறந்தால் அவருடைய குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் கடன் வசதியும் உண்டு.

பிளான் எண்: 914

குறைந்தபட்ச வயது: 8

அதிகபட்ச வயது: 55

1 லட்சம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

முதிர்வு 75வது வயதில்

 

3. புதிய ஜீவன் ஆனந்த்
 

3. புதிய ஜீவன் ஆனந்த்

எல்ஐசியின் புதிய ஜீவன் ஆனந்த் திட்டம் என்பது தனிநபர், ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இந்த திட்டமும் பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் கவர்ச்சிகரமான கலவையாக உள்ளது. பாலிசிதாரர் உயிரிழந்தால் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பும், பாலிசி முடியும் வரை பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் மிகப்பெரிய தொகையையும் வழங்குகிறது. இந்த திட்டத்திலும் கடன் வசதி உண்டு.

பிளான் எண்: 915

குறைந்தபட்ச வயது: 8

அதிகபட்ச வயது: 50

1 லட்சம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

முதிர்வு 75வது வயதில்

 

4. ஜீவன் லக்ஷ்யா

4. ஜீவன் லக்ஷ்யா

எல்ஐசியின் ஜீவன் லக்ஷ்யா என்பது பாலிசிதாரரின் பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் ஒருங்கிணைப்பாக உள்ளது. இந்தத் திட்டம் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். குறிப்பாக குழந்தைகளின் நலனுக்காக உதவுவது மட்டுமின்றி, முதிர்ச்சிக்கு முன் எந்த நேரத்திலும் பாலிசிதாரரின் துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், முதிர்வு நேரத்தில் ஒரு மொத்தத் தொகையை வழங்குகிறது.

பிளான் எண்: 933

குறைந்தபட்ச வயது: 18

அதிகபட்ச வயது: 50

1 லட்சம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

முதிர்வு 65வது வயதில்

 

5. ஜீவன் உமாங்

5. ஜீவன் உமாங்

எல்ஐசியின் ஜீவன் உமாங் திட்டம் உங்கள் குடும்பத்திற்கு வருமானம் மற்றும் பாதுகாப்பு என இரண்டையும் கவனித்து கொள்கிறது. இந்தத் திட்டம் பிரீமியம் செலுத்தும் காலத்தின் முடிவில் இருந்து முதிர்வு காலம் வரையிலான வருடாந்திர உயிர்வாழ்வதற்கான பலன்களை வழங்குகிறது. பாலிசி காலத்தின் போது பாலிசிதாரரின் முதிர்ச்சியின் போது அல்லது இறந்தவுடன் ஒரு மொத்த தொகையை செலுத்துகிறது.

பிளான் எண்: 945

குறைந்தபட்ச வயது: 90 நாட்கள்

அதிகபட்ச வயது: 55

2 லட்சம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

முதிர்வு 100வது வயதில்

6. குழந்தைகள் மணிபேக் பாலிசி

6. குழந்தைகள் மணிபேக் பாலிசி

எல்ஐசியின் புதிய குழந்தைகளுக்கான பணம் திரும்பப் பெறும் திட்டம். தனிநபர், ஆயுள் காப்பீட்டுத் திட்டமான இந்த திட்டத்தில் உயிருடன் இருக்கும்போதும் நன்மைகள் அதிகம். வளரும் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 0 முதல் 12 வயது வரையிலான குழந்தைக்கு பெற்றோர் அல்லது உறவினர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை வாங்கலாம்.

பிளான் எண்: 932

குறைந்தபட்ச வயது: 0

அதிகபட்ச வயது: 12

1 லட்சம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

முதிர்வு 25வது வயதில்

7. பீமா ஸ்ரீ

7. பீமா ஸ்ரீ

எல்.ஐ.சியின் பீமா ஸ்ரீ திட்டம் என்பது தனிநபர், ஆயுள் காப்பீட்டு சேமிப்பு திட்டமாகும். எல்ஐசியின் பீமா ஸ்ரீ திட்டம், குறைந்தபட்ச அடிப்படைத் தொகை ரூ 10 லட்சம் ஆகும். இந்த திட்டம் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களின் இலக்கு பிரிவினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வயது: 8

அதிகபட்ச வயது: 55

10 லட்சம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

20 வருடத்தில் முதிர்வுத்தொகை

குடும்ப பாதுகாப்பு

மேற்கண்ட 7 பாலிசிகளில் ஒன்றை தேர்வு செய்து உங்களுடைய சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை உறுதி செய்வதுடன் உங்களுக்கு பின் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ளலாம்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

7 LIC Plans to invest in 2022: Details of Returns, Minimum and maximum investment

7 LIC Plans to invest in 2022: Details of Returns, Minimum and maximum investment | 2022ல் முதலீடு செய்ய சிறந்த எல்.ஐ.சியின் 7 பாலிசிகள்

Story first published: Monday, June 27, 2022, 8:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.