விஜயபுரா : ”மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்னாத் ஷிண்டே இடையிலான கருத்து வேறுபாட்டால், சிவசேனா இரண்டு பாகமாகியுள்ளது. இதில் பா.ஜ.,வின் கைவரிசை இல்லை. ஆப்பரேஷன் தாமரையும் செய்யவில்லை. 50 எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஆப்பரேஷன் தாமரை செய்ய முடியுமா,” என பெரிய, நடுத்தர தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி கேள்வியெழுப்பினார்.
விஜயபுராவில் அவர் நேற்று கூறியதாவது:காங்கிரஸ், என்.சி.பி., சிவசேனா சேர்ந்து, அரசு அமைத்த போதே, இந்த அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என தெரியும். மூன்று கட்சிகள் கூட்டணி வைத்து, அரசு அமைத்ததே பெரிய தவறாகும்.மூன்று கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்ட போது, தேர்தல் அறிக்கைகள், வெவ்வேறாக இருந்தது. இம்மூன்றும் சேர்ந்து, கூட்டணி வைத்து, அரசு நடத்தியதே தவறு.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு, பா.ஜ., 50 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு. மஹாராஷ்டிராவில் அடுத்து என்ன செய்வது என்பதை, மாநில, தேசிய தலைவர்கள் முடிவு செய்வர்.உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஏக்னாத் ஷிண்டே இடையிலான கருத்து வேறுபாட்டால், சிவசேனா இரண்டு பாகமாகியுள்ளது. இதில் பா.ஜ.,வின் கைவரிசை இல்லை. ஆப்பரேஷன் தாமரையும் செய்யவில்லை.
50 எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஆப்பரேஷன் தாமரை செய்ய முடியுமா.’அடுத்த முதல்வர் நானே’ என குமாரசாமி கனவு காண்பதில், தவறேதுமில்லை. அரசியல் செய்பவர் கனவு காணட்டும். இவருக்கு கடவுள் நல்லது செய்யட்டும். உமேஷ் கத்தி ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். அவருக்கு அனுபவம் உள்ளது. தனி மாநிலம் என்பது, அவரது தனிப்பட்ட கருத்து. இது கட்சி அல்லது அரசின் கருத்து அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement