உலகின் நம்பர் ஒன் பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் அவர்கள் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இந்த நிலையில் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு அவர் ஒரு கடினமான சவால் நிறைந்த ஆண்டாக எதிர்கொள்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
1991 தாராளமயம்.. பொருளாதார போக்கையே மாற்ற நினைத்தவருக்கு வணக்கம்.. ஆனந்த் மஹிந்திரா செம ட்வீட்!
எலான் மஸ்க் பிறந்தநாள்
ஜூன் 28 ஆம் தேதியான இன்று உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து 10 மடங்குக்கு மேல் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
சவால்கள்
இன்று பிறந்த நாள் கொண்டாடும் எலான் மஸ்க் அவர்கள் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும், அவர் எதிர்கொள்ளக்கூடிய சவால்களும் அதிகம் உள்ளது. எலான் மஸ்க் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்குகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
தொழிலாளர்களின் புகார்கள்
குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் இனப்பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை அவர் தற்போது எதிர்கொண்டு வருகிறார். இந்த வழக்குகளில் ஒன்று தொழிலாளர்களின் புகார்களை அவர் அலட்சியப்படுத்தியதாக கூறப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் டெஸ்லா நிர்வாகத்திற்கு எதிராக பங்குதாரர்களால் தாக்கல் செய்யப்பட்டது என்பதும், இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணி நீக்க வழக்கு
அடுத்ததாக முன்னாள் டெஸ்லா ஊழியர்கள் ஜூன் 19ஆம் தேதியன்று எலான் மஸ்க் மீது பணிநீக்கம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். தங்களது பணி நீக்கம் அமெரிக்க கூட்டாட்சி சட்டங்களை மீறியது என்று அவர்கள் தங்களது வழக்கில் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கும் நடைபெற்று வருகிறது.
கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு
மேலும் கிரிப்டோகரன்சி விலை கடும் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் Dogecoin என்ற கரன்சியின் விலையை உயர்த்துவதற்காக மோசடியான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர்மீது குற்றச்சாட்டு உள்ளது என்பதும் அந்த வழக்கையும் அவர் எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
செல்ஃப் டிரைவிங் கார்
இந்த நிலையில் தொழில்துறையில் பல புரட்சிகளை செய்துவரும் எலான் மஸ்க் அவர்கள் அடுத்த ஆண்டுக்குள் செல்ஃப் டிரைவிங் காரை ரிலீஸ் செய்ய இருப்பதாக உறுதி அளித்துள்ளார். டெஸ்லாவின் மின்சார கார்கள் மற்றும் அதன் நுகர்வோர்களின் எண்ணிக்கை வலுவாக இருந்தாலும் விரைவில் செல்ஃப் டிரைவிங் கார்களை அவர் வழங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் விவகாரம்
ஊடகங்களில் தலைப்புச் செய்தியில் எலான் மஸ்க் அதிகம் இடம் பெற்றது ட்விட்டர் விவகாரத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை கையகப்படுத்தும் முயற்சியில் அவர் இருந்த நிலையில் திடீரென டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகம் இருப்பதால் அதை வாங்குவதில் இருந்து பின்வாங்கினார்.
பேச்சுவார்த்தை
இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் எந்த விதமான உடன்பாடும் இன்னும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல சவால்களை எதிர்கொண்டு இருந்தாலும் அவரது தொழில் முன்னேற்றம் மிகப்பெரிய அளவில் இருப்பதால் எலான் மஸ்க் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை நிம்மதியாக கொண்டாடலாம் என்று தான் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Billionaire Businessman Elon Musk Birthday Today!
Billionaire Businessman Elon Musk Birthday Today! | 51வது பிறந்தநாளை கொண்டாடும் எலான் மஸ்க்: எதிரே நிற்கும் சவால்கள்!