வரும் ஜுலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தும் ஏற்பாடுகள் திடீரென இன்று காலை நிறுத்தப்பட்டது.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் குழப்பம் நீடிப்பதாகவும், ஏற்கனவே மீனம்பாக்கம், ஓஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி வளாகங்களில் பொதுக்குழு நடத்த பரிசீலிக்கப்பட்ட பிறகு மாற்றப்பட்டது.
மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்கிறதோ என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்தது.
இதற்கிடையே, சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை என்று, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு வழி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்திலேயே வருகின்ற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேறு இடம் ஒத்து வராத காரணத்தினால் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்திலேயே பொதுக்குழுவை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு நடக்கும் என்று நாளைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அதிமுக வட்டாரத்தில் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
#BREAKING || பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை… நீதிமன்றத்தில் மிஸ் ஆனாலும் ஓபிஎஸ் போட்ட “பிளான் பி” இருக்கே.! அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு.! #ADMK #OPanneerselvam #EdappadiPalaniswami #OPS #EPS #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunalhttps://t.co/aNnqUKYrV1
— Seithi Punal (@seithipunal) June 28, 2022