கடந்த இருபத்தி மூன்றாம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை முன்னதாக அறிவிக்க வேண்டும் எனவும், மேலும் புதிய தீர்மானங்கள் எதுவும் பொதுக்குழுவில் நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட இருபத்தி மூன்று தீர்மானங்கள் தவிர, புதிதாக வேறு எதுவும் தீர்மானங்கள் நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இருபத்திமூன்று தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும்,
* தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
* அதிமுகவில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனு தமிழ்மகன் உசேன் இடம் வழங்கப்பட்டது.
* ஜுலை 11 ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் அதில் எங்கள் உத்தரையும் கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், பொதுக்குழு சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டுள்ளது.
#BigBreaking || அதிமுகவின் பொதுக்குழு இடம் தேர்வு செய்யப்பட்டது…. வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு.! #ADMK #OPanneerselvam #EdappadiPalaniswami #OPS #EPS #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunalhttps://t.co/Q7WvlAoVRW
— Seithi Punal (@seithipunal) June 28, 2022