Reliance Jio: சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார் முகேஷ் அம்பானி.. ஆகாஷ் அம்பானி ஆட்டம் ஆரம்பம்..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாகம் இந்த வருடமும் துவக்கம் முதலே முகேஷ் அம்பானி தனது வாரிசு கைகளுக்கு வர்த்தகத்தை மாற்றும் பணியில் இறங்க முடிவு செய்தார்.

இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமை அலுவலகத்தில் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கு தனித்தனி அலுவலகம், நிர்வாக அணி ஆகியவை அளிக்கப்பட்டுப் பொறுப்பைக் கைமாற்றும் பணிகள் விறுவிறுப்பாகப் பணிகள் நடந்தது.

இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி சேர்மன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முகேஷ் அம்பானிக்கு வயசு ஆச்சு.. வாரிசு கைக்கு மாறும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான டெலிகாம் சேவை அளிக்கும் ரிலையன்ஸ் ஜியோ துவக்க நாளில் இருந்து முகேஷ் அம்பானியும் அவரது மூத்த மகனான ஆகாஷ் அம்பானி தலைமையில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் இதர அனைத்து டெலிகாம் சேவை பிரிவுகளும் ஆகாஷ் அம்பானி கைகளுக்குப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் (director) பதவியை ஜூன் 27 ஆம் தேதி ராஜினாமா செய்ததை அடுத்து, ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் ஆகாஷ் அம்பானி-யை சேர்மன் ஆக நியமிக்க அதன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகச் செவ்வாய்க்கிழமை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.

 ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்
 

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்

இதேவேளையில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் உட்பட அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளையும் வைத்திருக்கும் முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டின் சேர்மன் ஆக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருப்பார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் தாய் நிறுவனம்.

ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

இதேபோல் ஆகாஷ் அம்பானி சேர்மன் ஆக மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ-வின் Non Executive Director ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

 புதிய நிர்வாக இயக்குனர்

புதிய நிர்வாக இயக்குனர்

இதோடு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டத்தில் ஜூன் 27, 2022 முதல் அடுத்த 5 வருடத்திற்கு இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகப் பங்கஜ் மோகன் பவார் நியமிக்கப்பட்டு உள்ளார். இதோடு ரமிந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி. சௌத்ரி, கூடுதல் இயக்குநர்களாக அடுத்த 5 வருடத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பங்குகள்

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பங்குகள்

டிராய் தரவுகள் படி ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும் இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பங்குகள் 1.49 சதவீதம் அதிகரித்து 2529 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது.

ரூ.60000 கோடி சொத்து.. ஜின்னா-வின் வாரிசு.. வியக்கவைக்கும் வாடியா குடும்பம்..!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh Ambani resigns as Director of Reliance Jio, son Akash Ambani appointed as Chairman

Mukesh Ambani resigns as Director of Reliance Jio, son Akash Ambani appointed as Chairman முகேஷ் அம்பானி சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.