Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால், தனது கருத்தையும் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
Tamil News Latest Updates
வசூல்படி அதிகரிப்பு!
தமிழக அரசின் சாதாரண பயண கட்டண பேருந்துகளில், மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் கோரிக்கை!
ஈரான்,துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் பாகிஸ்தான் தூதரக ட்விட்டர் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முடக்கப்பட்ட பாகிஸ்தான் தூதரகங்களின் ட்விட்டர் பக்கங்களை மீட்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி!
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக, ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். மேலும் ஜுலை 10ஆம் தேதி வரை நகர்ப்புற பள்ளிகள், அத்தியாவசியம் இல்லாத சேவைகள் இயங்காது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஒற்றை தலைமை விவகாரம் குறித்து இ.பி.எஸ் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ள ஓ.பி.எஸ் இன்று சட்ட வல்லுநர்களுடன் 2வது நாளாக ஆலோசிக்க முடிவு செய்துள்ளார்.
உக்ரைனில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, ரஷ்யாவின் இந்த செயல் மிகப்பெரிய போர் குற்றம் என ஜி7 அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.