அதல பாதாளத்தில் ரூபாய் மதிப்பு.. மீண்டும் மீண்டும் சரிவு.. இனி என்னவாகுமோ?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத அளவு மோசமான சரிவினைக் கண்டுள்ளது.

தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ரூபாயின் மதிப்பானது மேற்கோண்டு சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் தொடர்ந்து கணித்து வருகின்றனர்.

இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த அமர்வில்78.77 ரூபாயாக வீழ்ச்சி கண்டு முடிவடைந்திருந்த நிலையில், இன்று 78.95 ரூபாய் என்ற வரலாற்று சரிவினைக் கண்டுள்ளது.

வரலாற்று சரிவில் ரூபாயின் மதிப்பு.. அன்னிய முதலீடு வெளியேற்றம்.. என்ன காரணம்..?!

 முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து உச்சம் எட்டி வரும் நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது. இது தொடர்ந்து பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது அன்னிய முதலீடுகளும் வெளியேறி வருகின்றன. இது மேற்கோண்டு சந்தை அழுத்தத்தினை காண வழிவகுத்துள்ளது.

எவ்வளவு சரிவு?

எவ்வளவு சரிவு?

இதற்கிடையில் தான் இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று 78.95 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. இது கடந்த அமர்வில் 78.77 ரூபாயாக சரிவினைக் கண்டு முடிவடைந்திருந்தது. இன்று ரூபாயின் மதிப்பானது 79 ரூபாயாக சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பங்கு சந்தை சரிவு
 

பங்கு சந்தை சரிவு

இன்று காலை தொடக்கத்திலேயே வரலாறு காணாத அளவு 78.85 ரூபாயாக தொடங்கியது. இது தொடர்ந்து பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில், தொடர்ந்து ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது.

எண்ணெய் விலை சரிவு

எண்ணெய் விலை சரிவு

தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது உச்சம் எட்டி வரும் நிலையில், இதுவும் பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. நடப்பு மாதத்தில் மட்டும் ரூபாயின் மதிப்பானது 1.5% சரிவினைக் கண்டுள்லது. இதே ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் 6% சரிவினைக் கண்டுள்ளது. இது இன்னும் சரியலாம் என்றே நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பானது 104.1 ஆக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், பொருளாதாரம் சரிவினைக் காணலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது, இது மேற்கொண்டு ரூபாய் மதிப்பு சரிவடைய காரணமாக அமைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rupee ரூபாய்

English summary

indian rupee hits lifetime low of 78.95: it may fall further

Indian rupee depreciated to an all-time low of 78.95 against the dollar in early trade today, amid falling stock markets, crude oil, dollar and inflation.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.