அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு, சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆகிய சசிகலா வர உள்ளதாக போஸ்டர் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒற்றை தலைமை விவகாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் மாறிமாறி வழக்குகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
வருகின்ற ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு, சசிகலா வர உள்ளதாக போஸ்டர் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில்,
“அதிமுக பொதுச்செயலாளர், ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமே.. தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே… கழகத்தைக் காத்திட.. எங்களை வழி நடத்திட… கட்சி அலுவலகத்திற்கு வருக.. வருக.. வருக..” என்று திருத்தணியை சேர்ந்த நரசிம்மன் என்பவர் சுவரொட்டி ஒன்றை ஒட்டி இருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயப்பேட்டை அருகே இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த சுவரொட்டி மேலே, எடப்பாடிபழனிசாமி தரப்பிலிருந்து ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில், தலைவா வா… தலைமை ஏற்க வா… எடப்பாடியார்.. ஒற்றை தலைமை ஒன்றே தீர்வு” என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டி ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.