தமிழகத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் சிசிடிவி கேமரா மற்றும் சென்சார் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் உள்துறை செயலாளர் வெளியிட்டு இருக்க கூடிய அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அனைத்து பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடிய பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் முன் பகுதியில் ஒரு கேமராவும், பின் பகுதியில் ஒரு கேமராவும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பேருந்து பின்னால் எடுக்கும்போது ஓட்டுநர் பார்ப்பதற்கு வசதியாக இந்த கேமரா பயன்படும் வகையில் அமைக்க வேண்டும்.
மேலும் வாகனத்தின் நான்கு பகுதிகளிலும் சிக்னல் கொடுப்பதற்கான சென்சார் வைக்கப்படவேண்டும்.
வாகனம் எதன்மீதாவது இடிக்கும் நிலைக்கு சென்றால் உடனடியாக சிக்னல் ஒலிக்கும் வகையில் அது அமைக்கப்பட வேண்டும் என்று, அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை என்பது உடனடியாக பின்பற்ற வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.