வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை-அமெரிக்காவின் ‘ஆஸ்கர்’ அகாடமியில், நடிகர் சூர்யா உள்ளிட்ட, 397 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்கர் அகாடமி, ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகையர் உள்ளிட்டோரை தேர்வு செய்து விருது வழங்குகிறது.
இந்த அமைப்பு, அமெரிக்கா நீங்கலாக, 53 நாடுகளில், திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த சேவையாற்றி வரும் 397 கலைஞர்களை, ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளது. ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சூர்யா, ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக தேர்வான முதல் தமிழ் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார்.
ஹிந்தி, தமிழ் படங்களில் நடித்த கஜோல், இந்தாண்டு சிறந்த ஆவணப் படமாக தேர்வாகி ஆஸ்கர் வென்ற ரைட்டிங் வித் பயர் படத்தின் இயக்குனர்கள் கோஷ், தாமஸ், சம்சாரா என்ற திபெத்திய படத்தின் இயக்குனர் நலின் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான், நடிகை வித்யாபாலன் உள்ளிட்டோர் ஏற்கனவே ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக உள்ளனர்.
Advertisement