ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : இலங்கை அணி 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

காலே,

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ,இலங்கை காலேவில் இன்று தொடங்கியது . டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனால் அந்த அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகள் இழந்தது.இலங்கை அணியில் நிரோஷன் டிக்வெல்லா மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து .58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

இறுதியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஆஸ்திரேலிய அணியில் கிறிஸ் லின் 5 விக்கெட்டுக்கும் ,ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது.உஸ்மான் கவாஜா 47 ரன்களிலும் ,டிராவிஸ் ஹெட் 6 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.