லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் ரோஹித் ஷர்மா விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோஹித் ஷர்மா இடம்பெறாத நிலையில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.