பர்மிங்காம்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால்,இங்கிலாந்து அணிக்கு எதிரான5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனவும் ,அவர் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .இதனால் இந்த டெஸ்ட் போட்டிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.