இட்லி மாவு இருந்தால் போதும் மிக எளிதில் இன்ஸ்டண்ட் போண்டா செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு
பஞ்சை மிளகாய்
சீரகம்
பெருங்காயம்
சோடா மாவு
மிளகாய்த் தூள்
ரவை
அரிசி மாவு
நறுக்கிய வெங்காயம்
தேவையான அளவு உப்பு
கருவேப்பில்லை
நறுக்கிய கொத்தமல்லி
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு எடுத்துகொள்ளவும். இதில் சீரகம், பெருங்காயம், சோடா மாவு மிளகாய்த்தூள் போட்டு கலக்கவும். தொடர்ந்து ரவை, அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதில் கருவேப்பில்லை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கிளரவும். தொடர்ந்து போண்டா போல் சிறிய உருண்டை ஆக்கி, கொதிக்கும் எண்ணெய்யில் போடவும். நன்கு பொன்நிறமாக மாறியதும் வெளியே எடுக்கவும். சுவையான போண்டா ரெடி.