பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய 4 இந்திய நகரங்கள், ஆசிய பசிபிக் நிலைத்தன்மை குறியீடு 2021ன் (Asia Pacific Sustainability Index 2021) படி, முதல் 20 நிலையான நகரங்களில் இடம் பெற்றுள்ளன.
உலகளாவிய சொத்து ஆலோசகரான நைட் பிராங்கின் ( Knight Frank’s APAC Sustainably Led Cities Index) குறியீட்டின் படி, நகரமயமாக்கல் அழுத்தம், கால நிலை பிரச்சனை, கார்பன் உமிழ்வு மற்றும் அரசின் முயற்சிகள் என பலவற்றின் அடிப்படையில் இந்த நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
யாரும்மா நீ.. 32 வயதில் 10 ப்ரேவேட் ஜெட்-க்கு ஓனர்..!
வணிக ரியல் எஸ்டேட்டில் பெஸ்ட்
சிங்கப்பூர், சிட்னி, வெலிங்டன், பெர்த் மற்றும் மெபோர்ன் ஆகியவை பசிபிக் பிராந்தியத்தில் வணிக ரியல் எஸ்டேட் மதிப்பீட்டில், பசுமை மதிப்பீடு பெற்ற முதல் 5 நகரங்களாகும்.
இந்தியாவின் தங்க நகரம்
இதே சிறந்த நிலைத்தன்மை கொண்ட இந்த நகரங்களில் பெங்களூரு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. இதே ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வணிக ரியல் எஸ்டேட்டில் 14வது இடத்தினையும் பிடித்துள்ளது. இதில் தங்கம் என்ற தரத்தினை இடம் பிடித்த ஒரே இந்திய நகரம் பெங்களூரு தான்.
2வது இடம் யாருக்கு?
இந்தியாவில் சிறந்த 2வது நகரமாக டெல்லி இடம் பிடித்துள்ளது. இதே ஆசிய பிராந்தியத்தில் 17வது இடத்தினையும் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து 18வது இடத்தில் ஹைத்ராபாத்தும் , மும்பை 20வது இடத்திலும் உள்ளன.
தேவை அதிகரிப்பு
நைட் பிராங்கின் இந்திய தலைமை நிர்வாக இயக்குனரான ஷிஷிர் பைஜால், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில், சுற்றுசூழலுக்கு ஏற்றவாறு உருவாக்க தகுந்த நடவடிக்கையினை உருவாக்குவதில் உறுதியான கவனம் செலுத்தி வருகின்றது. இதன் காரணமாக இந்திய டெவலப்பர்களின் தேவை அதிகரித்துள்ளது.
உலகளாவிய தரம்
ஏனெனில் நிலையான, நல்ல தரமான, பசுமையான கட்டிடங்கள் அதிக வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதால், இது எதிர்காலத்தில் உலகளாவிய தரத்தில் மாறலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது மேற்கொண்டு இந்திய நகரங்களின் நிலைத்தன்மையை அதிகரிக்கலாம்.
பசுமை பத்திரங்கள்
இந்தியாவில் பசுமை பத்திர வெளியீடானது 2020ல் 1.1 பில்லியன் டாலராக இருந்தது. இது 2021ல் 523% அதிகரித்து, 6.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
2021 நிலவரப்படி வழங்கப்பட்ட மொத்த பசுமை பத்திரங்கள் அடிப்படையில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா ஆறாவது இடத்தினை பிடித்துள்ளது. 2020ல் கொரோனா பெருந்தொற்று காரணமாக எதிர்மறையான தாக்கத்தினை எதிர்கொண்ட பசுமை பத்திரங்கள், 2021ல் தான் மீண்டன.
4 Indian cities including Bangalore, Delhi, Hyderabad, Mumbai among top 20 sustainable cities in asia pacific
Bangalore, Delhi, Hyderabad and Mumbai are the four Indian cities in the top 20 standard cities according to the Asia Pacific Sustainability Index 2021.