இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி பிரச்னை உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே மாறிமாறி போஸ்டர் ஒட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
image
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான மிசா செந்தில் என்பவர், அதிமுக கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தவறுகளை செய்த எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி , ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து கடந்த 26.6.2022 முதல் நீக்கப்படுகிறார்கள். எனவே கழக தொண்டர்கள் இவர்களுடன் எந்த தொடர்பும் வைக்கக் கூடாது என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை கட்சி இருந்து நீக்கியதாக கட்சி நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.