திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சொந்த பெரியப்பா வீட்டில் 48 சவரன் நகைகளை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருப்பையா என்பவரின் மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் இறுதி சடங்குகளுக்கு பின் வீட்டில் இருந்த 48 சவரன் நகைகள் மாயமானது.
இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார், இறுதி சடங்குகளுக்கு வந்த குடும்ப உறுப்பினர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தினர்.
அதில், கருப்பையாவின் தம்பி மகள் கெளசல்யா, பீரோவில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், 28 சவரன் நகைகளை மீட்டுள்ளனர்.