ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் மறுமலர்ச்சி தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைகள் உறுதியான முடிவுகளை வழங்காததை அடுத்து, எண்ணெய் விலைகள் புதன்கிழமை அதிகரித்தன.
ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி தரும் விதமாக கடந்த 2020 ஆண்டு ஈராக்கில் உள்ள இரண்டு ராணுவ தளங்கள் மீது ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் நேரடி மோதல் உருவாகியது.
மேலும் அதன் விளைவாக ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்ததை நிறுத்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்தநிலையில், அணுசக்தி ஒப்பந்ததை மறுமலர்ச்சி செய்வது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தையில் சமீபத்தில் நடைபெறுவதாக தெரியவந்தது.
இதில் எந்தவொரு முக்கிய முடிவுகளும் எட்டப்படாத நிலையில், கச்சா எண்ணெய் விலைகள் புதன்கிழமை அதிகரித்துள்ளது.
சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் எட்டப்படாததால், முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் வழங்குதலில் ஏற்பட்டும் நெருக்கடி குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள்!
வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்டின்(WTI) ஆகஸ்டில் டெலிவரிகளுக்கான விலை 1.92% அதிகரித்து காலை 8:52 மணிக்கு பீப்பாய் ஒன்றுக்கு $113.87க்கு விற்கப்பட்டது. பிறகு அதிலிருந்து சில நிமிடம் கழித்து, அதே மாதத்தின் தீர்வுகளுக்கான ப்ரென்ட் 1.72% முன்னேறி ஒன்றிக்கு பீப்பாய்க்கு $120.00 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.