மக்கள் கூடியிருந்த உக்ரைன் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா வீசிய ஏவுகணை வெடித்ததில், 20 பேர் வரை கொல்லப்பட்டார்கள், 50 முதல் 60 பேரைக் காணவில்லை…
திங்கட்கிழமையன்று, உக்ரைனிலுள்ள Kremenchuk நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் கூடியிருக்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என விதி இருந்தாலும், விதிகளை மீறி, மனித உயிர்களை கொஞ்சமும் மதிக்காமல் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
அவரது அராஜக மன நிலைமைக்கு இந்த வணிக வளாக தாக்குதல் மற்றொரு சாட்சியமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏவுகணையால் தாக்கப்பட்டு, அந்த வணிக வாளகம் செங்கற்சூளையைப் போல் பற்றியெரியும் காட்சிகள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது, அந்த ஏவுகணை வந்து சரியாக அந்த வணிக வளாகத்தின் மீது விழுந்து வெடிக்கும் அதிரவைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
அந்த ரஷ்ய ஏவுகணை, வணிக வளாகத்தின் மீது விழ, அது வெடித்துச் சிதறுவதைப் பார்க்க, மனம் பதறுகிறது.
இந்த தாக்குதலில் வயது வித்தியாசமே இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொல்லப்பட, சிதறிக்கிடந்த சடலங்களை என்னால் பார்க்கக்கூட இயலவில்லை என்கிறார் உள்ளூர் தீயணைப்புத்துறைத் தலைவரான Ivan Melekhovets.