உணவு பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு கூடுதலாக 20 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்தார்.
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் பைடன் நிதியுதவியை அறிவித்ததாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வழங்கிய நிதி இலங்கையின் உணவு நெருக்கடியை தீர்க்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் பயன்படுத்தப்படும் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.