மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ்தாக்கரே தலைமையில் நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் அவுரங்காபாத் நகரின் பெயரை சாம்பாஜி நகர் என்றும் ஓஸ்மானாபாத்தின் பெயரை தாராசிவ் என்றும் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதேபோல், நவி மும்பை விமானநிலையத்தின் பெயரை டிபி பட்டேல் சர்வதேச விமானநிலையம் என்று பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உத்தவ்தாக்கரே அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அமைச்சரவை இந்த அவசர முடிவுகளை எடுத்துள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, சொந்த கட்சியினரே தமக்கு துரோகம் இழைத்ததாக கூறினார். இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.