உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்ப்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.
அர்ஜூன் டாங்கியில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை இலக்கை மிகச் சரியாக தாக்கி அழித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறுகிய தூரம் முதல் தொலை தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் ஏவுகணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.