ஐசிசி டி20 தரவரிசை : விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் அதிக நாள் டி20 தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 1014 நாட்கள் முதல் இடத்தில் தொடர்கிறார். மொத்தம் 1013 நாட்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் முறியடித்துள்ளார்.

பாபர் அசாம் 818 புள்ளிகள் எடுத்து டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஷ்வான் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணி சார்பில் இஷான் கிஷன் மட்டும் 682 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். டி20 வடிவத்தில் மட்டுமின்றி ஒருநாள் பேட்டிங் தரவரிசையிலும் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.