ஐரோப்பிய பிராந்தியத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக இரண்டு F-35 போர் விமானங்கள் பிரித்தானியாவிற்கும், கூடுதாலாக இரண்டு destroyers போர் கப்பலை ஸ்பெயினிற்கும் அமெரிக்க அரசு அனுப்பியுள்ளது.
ஐரோப்பிய பிராந்தியங்களில் ரஷ்ய போர் அச்சுறுத்தல்கள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, அப்பகுதிகளில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை வலுப்படுத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஸ்பெயினில் உள்ள நான்கு destroyers போர் கப்பலுடன் கூடுதாலாக இரண்டு estroyers போர் கப்பலை அமெரிக்கா அனுப்பு எண்ணிக்கையை ஆறாக உயர்த்தும் எனவும், பிரித்தானியாவிற்கு கூடுதாலாக இரண்டு F-35 போர் விமானங்களை அனுப்ப உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் போலந்தில் 5வது ராணுவ தலைமையகத்தை அமெரிக்கா நிறுவும், அதைப்போல ருமேனியாவிற்கு கூடுதல் சுழற்சி படைப்பிரிவு அனுப்பப்படும், ஜெர்மனி மற்றும் இத்தாலிக்கு கூடுதல் வான் பாதுகாப்பு மற்றும் பிற ராணுவ திறன்கள் நிலைநிறுத்தப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நோட்டோவின் அனைத்து தளங்களையும் பாதுகாக்கவும், எந்த திசையில் அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நாங்கள் முன்னேறுகிறோம், நோட்டோ முன்பை விட இப்போது தேவை என்பதை நாங்கள் நிரூபித்து வருகிறோம் என தெரிவித்தார்.