நியூயார்க்:அமெரிக்காவில், ஏராளமான சிறுமியரை சீரழித்த நிதி நிறுவன அதிபருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், அவர் மனைவிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் எப்ஸ்டீன், இவரது மனைவி கெவின் மேக்ஸ்வல். இருவருக்கும் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள், மற்றும் வேறு பல நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் நெருக்கமான நட்பு இருந்துள்ளது.இதைப் பயன்படுத்தி, 17 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான சிறுமியர், பெண்கள் ஆகியோரை எப்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் பல பெண்களை உலகத் தலைவர்களுக்கு விருந்து படைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஒரு வழக்கில், எப்ஸ்டீன், 13 மாத சிறைத் தண்டனை அனுபவித்து வெளியே வந்தார். அதன் பின் மேலும் பல பெண்கள் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.
எனினும், கணவரின் செயல்களுக்கு மனைவி மேக்ஸ்வல் உதவி செய்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று, மேக்ஸ்வலுக்கு, 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் மீது பாலியல் புகார் கூறிய கியுப்ரி என்ற பெண், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு தன்னை விருந்தாக்கியதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓராண்டுக்கு முன் ஆண்ட்ரூவும், கியுப்ரியும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொண்டனர்.
Advertisement