தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரம், தீவைப்பு சம்பவங்களில் 51 பேர் கொல்லப்பட்டனர். சிறைக் கைதிகளிடையே கலவரம் மூண்டதாக கூறப்படுகிறது.
படுக்கை மற்றும் மெத்தைகளுக்கு கைதிகள் தீ வைத்ததில் சிறை முழுவதும் பரவி 51 பேர் உயிரிழந்ததனர். தீ மற்றும் வெட்டுக் காயங்களுடன் 20-க்கும் மேற்பட்ட கைதிகள், சிறை காவலர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள் கலவர போராட்டத்தில் ஈடுபட்டனர்.